
posted 13th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கள விஜயம்
உலக வங்கியினால் நிதி அளிக்கப்பட்டு சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஏற்பாடு செய்த மூன்று நாள் கள விஜயம் முடிவடைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட தலா பத்து உத்தியோகத்தர்களும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுமாக சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் பதுளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுகாதார நிறுவனங்களை பார்வையிட்டனர்.
குறித்த குழுவினர் பண்டாரவல பிரதேச வைத்தியசாலைக்கும் வீரகட்டிய பிரதேச வைத்தியசாலைக்கும் சென்று அங்கு PSSP திட்டத்தை முன்னெடுக்கும் விதம் தொடர்பிலும் முன்கூட்டியே தொற்றா நோய்களை கண்டறிந்து அதனை பதிவு செய்யும் முறைமை தொடர்பிலும் நேரடியாக கண்டறிந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)