
posted 21st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் குருதி தானம்
149ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் இரத்ததான முகாம் ஒன்று கல்முனை பிரதம அஞ்சல் அதிபர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி காமினி விமலசூரிய, அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கே.பி.எஸ். பிரியந்த உட்பட பிரதேச தபால் அதிபர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த இரத்ததான முகாமில் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் கே. ஹரிபிரசாத் இரத்ததானம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)