கடையடைப்புக்கு ஆதரவு கோரி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கடையடைப்புக்கு ஆதரவு கோரி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம்

எதிர்வரும் 20ம் திகதி வடக்கு கிழக்கில் முழுமையாக இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்பில் வடக்கு கிழக்கு முழுவதும் எதிவரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரும் பிரச்சார நடவடிக்கையில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், வடக்குமாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியத் தலைவர் சி. முகுந்தன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய வர்த்தக நகரங்களான திருநெல்வேலி, மருதனார்மடம் பகுதிகளில் ஆரம்பித்த கடையடைப்புக்கு ஆதரவு கோரும் பிரச்சார நடவடிக்கை வடக்கு கிழக்கில் உள்ள முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடையடைப்புக்கு ஆதரவு கோரி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)