
posted 31st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கடத்தி வரப்பட்ட ஐம்பொன் சிலை மீட்பு
வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட ஐம்பொன் சிலையை யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 30 இலட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்த இந்த சிலையை நேற்றைய தினம் திங்கட்கிழமை (30) யாழ்ப்பாணம் நகரை அண்டிய ஐந்து சந்திப் பகுதியில் வைத்து இந்த சிலை கைப்பற்றப்பட்டது.
சிலையை கடத்தியவர் தலைமறைவான நிலையில் அவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சிலை மீட்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)