
posted 31st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாணம் விஜயம்
இலங்கைக்கு வருகை தந்துள்ள ‘உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட்‘ தலைமையிலான குழுவினர் நேற்று திங்கட்கிழளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த குழுவினர் உலக வங்கியின் நிதியுதவியில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தைப் பார்வையிட்டனர்.
இவ்விஜயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)