உயர்நீதிமன்றம்  ஏற்றுக்கொள்ளவில்லை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை

"தெரியாது "என்று சொல்வதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் நசீர் அஹமட் வழக்குத் தீர்ப்பின் பின்னர் மு.கா செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமையை நீக்கி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் எடுத்த முடிவு சட்டபூர்வமானது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பின் 99/13 A என்ற ஷரத்திற்குக் கீழ் SC Expulsion 01/2023 வழக்கில் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமையை நீக்கி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் உயர்பீடம் மேற்கொண்ட முடிவைக் குறிப்பிட்டு, செயலாளர் ஊடாக அறிவிக்கப்பட்ட கடிதத்தை சவாலுக்கு உட்படுத்தி, ஹாபிஸ் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் நீண்ட விசாரணையின் தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரஸ்தாப வழக்கு நீதியரசர்களான பிரீதி பத்மன் சுரசேன, எஸ். துரைராஜா, மகிந்த சமயவர்த்தன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாத்தினால் விசாரிக்கப்பட்டு,அதன் தீர்ப்பு வெள்ளிக்கிழமை (6) வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சட்டத்தரணி விரான் கொரியா, ஏ. குலநாயகம் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் நெடுகிலும் பிரசன்னமாகியிருந்தார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும் அவ்வப்போது வந்து வாதப் பிரதிவாதங்களை அக்கறையோடு அவதானித்து வந்தார்.

நசீர் அஹமட் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவுடன் சட்டத்தரணிகளான ருவன்தா குரே, ருக் ஷான் சேனாதீர ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

குறித்த வழக்கில் நீதியரசர் பிரீதிபத்மன் சுரசேன நீண்டதொரு தீர்ப்பை எழுதியிருக்கிறார். நீதியரசர் மகிந்த சமயவர்த்தனவும் புறம்பான தீர்ப்பை சுருக்கமாக எழுதியிருக்கிறார்.

உண்மையிலேயே, தீர்ப்பில், நீதியரசர் மகிந்த சமயவர்த்தனவினால் எழுதப்பட்டதில் தெளிவாகவும், நேரடியாகவும் சில விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

நீதியரசர் பத்மன் சுரசேன இத்தகைய சட்டப் பிரச்சினை சம்பந்தமாக உலகின் ஏனைய நாடுகளில் உள்ள பல சட்டங்களை ஆராய்ந்து தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

நீதியரசர்கள் மூவரும் சொன்ன ஒரு விடயம்தான் நசீர் அஹமட்டிற்கு கட்சி உயர்பீடம் எடுத்த தீர்மானத்தின் படி 2021, 2022 ஆம் ஆண்டிற்குரிய வரவு, செலவு திட்டத்திற்கு அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்கக்கூடாது எதிர்த்து வாக்களிக்கவேண்டுமென்றும், அவ்வாறு இல்லாது விட்டால், வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், அதற்கு எதிராக அவர் செயல்பட்டு, வரவு செலவு திட்டத்திற்கு சார்பாக வாக்களித்ததுதான் அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

அந்த குற்றச்சாட்டில் சொல்லப்பட்ட விடயம் என்னவென்றால், கட்சியின் செயலாளர் கடிதம் அனுப்பியிருக்கத்தக்கதாக, "நீங்கள் உயர்பீடத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருக்கிறீர்கள். ஏன், அவ்வாறு வாக்களித்தீர்கள்" என அவரிடம் விளக்கம் கோரியது.

முக்கியமானது ஏனென்றால், திங்கள் கிழமை இரண்டாவது வாசிப்புக்கு வாக்களிக்கும் சூழ்நிலை இருந்த நிலையில், இந்த வாக்களிப்பு எவ்வாறாக அமைய வேண்டும் என்று தீர்மானிப்பதற்குதான் ஒரு நாள் முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை உயர்பீடம் கூடியிருந்தது. அது அந்த தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. செயலாளர் அவருக்கு இந்த கூட்டத்தைப் பற்றி அறிவித்தது மட்டுமல்ல, அந்த உயர்பீடக் கூட்டம் வரவு, செலவு திட்டத்தில் கட்சி என்ன நிலைப்பாடு எடுப்பது என்பதை தீர்மானிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரத்தியேகமான கூட்டம் என்கின்ற விடயத்தையெல்லாம் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அப்படி இருந்து கொண்டு தான் அந்த கூட்டத்திற்கு வரமுடியாது போய்விட்டது என்று செயலாளருக்கு செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு, அந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுத்தது என்று தனக்கு தெரியாது என்ற நிலைப்பாட்டையெடுத்தார். இதில்தான் உயர்நீதிமன்றம் மிகவும் கடுமையாக மனுதாரரின் நிலைப்பாட்டை விமர்சித்திருக்கின்றது. இவர் கட்சியுடைய பிரதி தலைவராக இருந்து கொண்டு, உயர்பீடத்தில் எடுத்த முடிவை தெரியாது என்று சொல்லுவது எப்படி?

அது மட்டுமல்ல, இன்னும் கூறப்படுவதாவது, நீதியரசர்கள், "சரி, திங்கள் கிழமை இரண்டாவது வாசிப்பில் உங்களுக்குத் தெரியாதென்றால், மூன்றாவது வாசிப்பு, ஒரு கிழமைக்குப் பிறகு நடந்தது கூடத் தெரியாதா" என்று சொல்லிவிட்டு, "ஏன், இவ்வாறு கட்சியின் முடிவுக்கு எதிராக வாக்களித்தீர்கள்?" என்று கேட்டபொழுது, அவர் அளித்த பதில், "எனக்கு கட்சியில் இப்படி முடிவெடுத்தது சம்பந்தமாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்த போதிலும், இது சம்பந்தமாக விளக்கம் தருவதிற்கு எனக்கு இன்னுமொரு நேரம் தாருங்கள்" என்று ஒரு மாதம் நேரம் கேட்டிருக்கிறார். மேலதிகமாக, யாப்பில் ஒரு பிரதியையும் தாருங்கள்" என்றும் கோரி அனுப்பியிருக்கிறார்.

நீதியரசர் சொல்கிறார், செயலாளர் இந்த நேரம் கோரப்பட்ட அவருடைய விண்ணப்பத்தை உயர்பீடத்திற்கு காட்டி உயர்பீடம் இன்னுமொரு நேரம் கொடுக்கின்றது. மீண்டும் அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டு, "ஏன் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக நீங்கள் வாக்களித்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் ஒரு மாதத்திற்கு பிறகும் அதே கதையைத்தான் சொல்கிறார். மீண்டும் நேரம் கேட்கிறார், மீண்டும் அவருக்கு நேரம் கொடுக்கப்படுகிறது. முன்றாவது தடவையும், அவர் ஏன் தான் அப்படி வாக்களித்தார் என்று காரணம் சொல்லாமல், வெறுமனே எனக்கு இந்த முடிவு பற்றித் தெரியாது என்று சொல்லிவிட்டு, எந்தக் காரணமும் கொடுக்கவில்லை. அப்போது நீதியரசர்கள் சொல்கிறார்கள், விளக்கம் கோரப்பட்டபொழுது விளக்கம் கொடுக்காவிட்டால், விசாரனை செய்வதற்கு அங்கு ஒன்றுமே கிடையாது. அவருக்கு கொடுப்பதற்கு விளக்கம் இல்லை என்ற அடிப்படையில் அந்த உயர்பீடம் அவரின் உறுப்புரிமையை நீக்க வேண்டும் எனத் தீர்மானிக்கின்றது. இது எந்தவிதமான ஒரு சட்டப்பிரச்சினையும் இல்லாத நேரடியான விடயம்.

நீதியரசர் மகிந்த சமயவர்த்தன கடைசியாக ஓர் இடத்தில் சொல்கிறார்" செயலாளர் அவருக்கு அனுப்பிய கட்சியின் அந்த முடிவை பிழை என்று செல்வதற்கோ, மாற்றுவதற்கோ ஒரு காரணமும் எங்களுக்கு தெரியவில்லை, ஏனென்றால், மூன்று முறை ஐந்து மாதம் கால அவகாசம் கொடுத்தும், "கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக ஏன் வாக்களித்தீர்கள் ?" என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அதற்கு காரணம் சொல்லாவிட்டால், விளக்கம் கொடுக்காவிட்டால் விளக்கம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற அடிப்படையில் அவர் அந்த குற்றத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமமாக வரப்போகின்ற ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே, இன்னும் மேலதிகமாக விசாரணை செய்யவேண்டிய அவசியம் கிடையாது என்பதாகும்.

ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இவை தொடர்பில் மேலும் தெரிவிப்பதாவது,

நான் நம்புகின்றேன், இந்த தீர்ப்பு சரித்திரத்தில் 25 வருடங்களுக்கு முன்பு, லலித் அத்துலத் முதலி வழக்கில் பிரமதாச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், விசாரணை தேவையில்லை. இவர்கள் முதற் தோற்றப் பார்வையிலேயே பொய்யாகவும், கபடத்தனமாகவும் நடந்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் உறுப்புரிமை மீறப்பட்ட விடயத்தில் சாதகமாக தீர்பளிக்கப்பட்டதற்கு பின்னர் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதாவது பொய்யாகவும், கபடத்தனமாகவும் தான் ஏன் கட்சி தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டேன் என்ற விடயத்தைச் சொல்லாமல், நீதி மன்றத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாததான கட்சித் தீர்மானம் தனக்குத் தெரியவில்லை என்பதை நீதியரசர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. ஏனென்றால் அப்போது மட்டுமல்ல, அதற்கு பிறகும் வாக்களித்திருக்கின்றார். மற்றது ஒரு பிரதித் தலைவராக இருந்து கொண்டு கட்சி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று சொல்வதை ஒரு கேலிக்கூத்தாகத்தான் நீதிமன்றம் பார்த்திருக்கிறது. ஆகவே, இது ஒரு மிக முக்கியமான தீர்ப்பாகும்.

நீதியரசர் பி. பத்மன் சுரசேன ஏறத்தாழ தமது 50 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் பல நீதிமன்ற மற்றும் சர்வதேச தீர்ப்புகளை முன்னுதாரணம் காட்டியதோடு, இந்த சூழ்நிலையில் மேலதிகமாக விசாரணை செய்வதற்கு அல்லது இயற்கையின் நியதி என்ற அடிப்படையில் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்ற கோட்பாடு இதற்கு உகந்ததல்ல என்று தீர்மானித்திருக்கிறார்.

ஏனென்றால், இவருக்கு மூன்றுமுறை தொடர்ச்சியாக விளக்கம் கோரியும், விளக்கம் தராமல் ஐந்து மாதம் அவகாசம் கொடுத்தும் இருந்த சூழ்நிலையில் கடைசியாகவும் அதே கதையைத்தான் எனக்கு தெரியாது என்று சொல்வது எந்த காரணத்தினாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றவாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது

இவ்வழக்கில் 97 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தார்கள். முதலாவது பிரதிவாதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், இரண்டாம், மூன்றாம் பிரதிவாதிகளாக கட்சியின் தலைவர் மற்றும் தவிசாளரும், நான்கு தொடக்கம் 91 வரையான பிரதிவாதிகளாக கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும், 92 ஆவது பிரதிவாதியாக கட்சியின் செயலாளரும், 93 வது பிரதிவாதியாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும், 94 தொடக்கம் 97 வரையான பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் பெயரிடப்பட்டிருந்தார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு வெற்றி குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கண்டியிலிருந்து உடனடியாகவே மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

உயர்நீதிமன்றம்  ஏற்றுக்கொள்ளவில்லை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)