இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்குத் தெரிவான  சிறி

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்குத் தெரிவான சிறி

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்குப் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தெரிவாகியுள்ளார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி, புலோலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆழ்வாப்பிள்ளை சிறி வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவன் ஆவார். 1999 ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தராக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அரச நியமனத்தைப் பெற்ற இவர், 2002 ஆம் ஆண்டு உதவித் திட்டமிடல் பணிப்பாளராகப் பணிபுரிந்து 2003 ஆண்டு இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக நியமனம் பெற்றார்.

நானாட்டான் மற்றும் வவுனியா பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து பின் நெடுந்தீவு மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகச் சேவையாற்றிய இவர், 2017ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலத்தின் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

வடமராட்சி வடக்கு பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும், இடர் நிலைகளைக் குறைப்பதற்காகவும் நேர்மையுடன் பாரபட்சமின்றி பொதுமக்களின் தேவைகளை நன்கறிந்து அதனை நிவர்த்தி செய்யும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக இவர் செயற்பட்டு வருகின்றார்.

கடந்த 2018 மற்றும் 2022 ஆண்டுகளில் தேசிய உற்பத்தித் திறன் போட்டிகளில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் தேசிய நிலையில் இரண்டாம் நிலையைப் பெற்றுக்கொள்வதற்கு இவர் அர்ப்பணிப்பான சேவையை வழங்கியிருந்தார். அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலகம் இவரது சேவைக் காலத்தில் மேலும் பல மாவட்ட மற்றும் தேசிய விருதுகளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்குத் தெரிவான  சிறி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)