
posted 1st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் நிர்வாகத் தெரிவு
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் நிர்வாக தெரிவு நேற்று (30) சனி பிற்பகல் 4:30 மணியளவில், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் தலைவராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக உபதலைவராக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ச. ஜெயந்தன், தொகுதிக்கிளை செயலாளராக பற்றிக் தனுஷ், உப செயலாளராக வண்ணக்குமார் விமலாம்பிகை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் தொகுதிகிளையின் உறுப்பினர்களாக சி. சிறிஜீவா, இ. காண்டீபன், வே. ஆனைமுகன், த. சிறீதரன்,சி. பரமானந்தவள்ளி, ஓ. நிரோசா, க. முருகானந்தன், த. சிவசுப்பிரமணியம், வ. விமலாம்பிகை, ஐ. நாகரஞ்சினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)