
posted 5th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இரண்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்று
சாவகச்சேரி கச்சாய் வீதி உப்புக்கேணி ஒழுங்கையில் உள்ள க. சந்திரகுமார் என்பவரின் வளர்ப்பு மாடு 02/10 திங்கட்கிழமை இரவு இரண்டு கன்றுகளை ஈன்றதுடன் அதில் ஒரு கன்று இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்துள்ளது.
இதன்போது முதலில் ஈன்ற கன்று ஆரோக்கியமாக இருப்பதுடன், இரண்டாவதாக பிரசவித்த இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்த கன்று பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.
மேற்படி மாட்டுக் கன்று வெறுமனே இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்துள்ள நிலையில் அதற்கு தலை இருக்கவில்லை என்பதுடன் பிறந்து சிறிது நேரம் அதன் உடலில் உயிர்த் துடிப்பு இருந்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அதிசய கன்றினை கிராம மக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அத்துடன் உரிமையாளரால் இது தொடர்பாக கால்நடை வைத்திய அதிகாரி பணிமனைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)