இந்த வாரம் சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்த வாரம் சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் இந்த வாரம் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா - கூமாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் கட்டிட பணிக்காக ரூபா 100,000 நிதியும், முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கின்ற 3 குடும்பத்தினருக்கு அடிப்படை தேவைகளான வெட்டுக் கிணறு கட்டுமான பணிக்காக ரூபா 250,000, யன்னல்கள், கதவுகள் பொருத்துவதற்கான செலாவாக ரூபா 60,000, மின் இணைப்புக்காக ரூபா 52,000 வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி பிரதேச மாணவர்களின் போக்குவரத்துக்காகவும், பாடசாலை வரவொழுங்கற்ற பிள்ளைகளின் வரவொழுங்கை மேம்படுத்தும் நோக்கில் பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பான வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் செயற்றிட்டத்திற்கு அமைவாக, நெடுங்கேணி மகா வித்தியாலயம், வ/ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலுகின்ற 83 மாணவர்களின் போக்குவரத்து நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பேருந்து கட்டணத்துக்கான கார்த்திகை, ஐப்பசி மாதங்களுக்கான நிதிச் செலவை சந்நிதியான் ஆச்சிரமம் ஏற்றுள்ளது .

அதற்கு அமைவாக 1ம் கட்ட கார்த்திகை மாத நிதியாக ரூபா 100,345 ரூபாவை பிரதேச செயலாளரிடம் வழங்கியுள்ளது.

பிரதேச செயலாளர், சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள், பாடசாலை முதல்வர், ஆசிரியர்கள், குறிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளடங்களாக சமூக செயற்பாட்டாளர் இ. தயாபரன், மற்றும் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை கடந்த 30/09/2023 அன்று சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெளியிடப்படுகின்ற ஞானச்சுடர் 308 ஆவது மலர் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரின் ஆவணி மாத 308 ஆவது மலர் இதுவாகும்.

இதில் மதிப்பீட்டுரையினை இளைப்பாறிய அதிபர் இரா. ஶ்ரீநடராஜா ஆற்றியிருந்தார்.

இதேவேளை, வடமராட்சி அபிவிருத்தி நிறுவகத்தின் வேண்டுகோளுக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலய சூழலில் பனம் விதை நடுகைச் செயற்றிட்டத்திற்காக ரூபா 100,000 நிதியும் நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் வழங்கிவைத்தார்.

இந்த வாரம் சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)