
posted 15th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இந்தியா - காங்கேசன்துறை மக்களுக்கான கப்பல் சேவை
50 பயணிகளுடன் இந்தியா - நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை - காங்கேசன்துறையை நோக்கி மதியம் 12.15 மணியளவில் வந்தடைந்தது.
மீண்டும் இன்று பி.ப 2.00 மணியளவில் 31 பயணிகளுடன் இந்தியா - நாகபட்டினம் நோக்கி சென்றது.
விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் கப்பலில் பயணித்த பயணிகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த கப்பல் பயணமானது மிகவும் சௌகரியமாகவும், பாதுகாப்பானதாகவும், பிரியோசனமாகவும் அமைந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
இந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு ஆளுநர் திருமதி சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)