
posted 14th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஆளுநர் - ஆணையாளர் கலந்துரையாடல்
அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரின் மத உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் தூதுவர் ஸ்டீபன் ஸ்னெக், தூதுவர் ஜேமி ஸ்டாலி, கண்காணிப்பு கொள்கை ஆலோசகர் செமா ஹசன், கொள்கை ஆய்வாளர் ரூபி உட்சைட், அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஷந்தீப் குரூஸ், அமெரிக்கா கொழும்பு தூதரகத்தின் அரசியல் நிபுணர் ஆகியோர் உடனிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)