
posted 16th October 2023
துயர்பகிருங்கள்
அப்துல் கலாம் பிறந்தநாள் யாழில் கொண்டாடப்பட்டது
இந்திய முன்னாள் குடியரசு தலைவர் கலாநிதி ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 92ஆவது பிறந்த தினம் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை பொது நூலகத்தில் நடைபெற்றது.
அவரின் சிலைக்கு யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், தலைமை நூலகர், நூலக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளும் இணைந்து அன்னாருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாண பொது நூலகத்தில் கலாநிதி அப்துல் கலாமின் மார்பளவு திருவுருவ சிலையை நிறுவிய இந்திய அரசுக்கு யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் ஜெயசீலன் நன்றி தெரிவித்தார்.
அப்துல் கலாம் யாழ்ப்பாணத்துடனான தொடர்புகள் குறித்து பேசிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் சந்திரயான் - 3 விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவை மிகப் பெரிய சாதனைக்கு இட்டுச் செல்கின்றது என்றும் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)