ஹெரோயின் முகவருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கல்முனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கல்முனைப் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விநியோகம் செய்யும் முக்கிய முகவர் என சந்தேகிக்கப்படும் இந்நபர் கடந்த வெள்ளிக்கிழமை (07) நள்ளிரவு வேளையில் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கல்முனைக்குடி உள்ளூர் வீதியொன்றில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது இவரிடம் ஹெரோயின் போதைப்பொருள் 7.870 கிராம் மற்றும் கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சந்தேக நபரை திங்கட்கிழமை (10) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது மேற்படி விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஹெரோயின் முகவருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

ஹெரோயின் முகவருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
ஹெரோயின் முகவருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
ஹெரோயின் முகவருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
ஹெரோயின் முகவருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More