
posted 13th October 2022
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக இனங்காட்டிக் கொண்டு நியூசிலாந்து நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி கல்முனைப் பிரதேசத்தில் பலரிடம் பணம் பெற்று, மோசடியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலரது முறைப்பாடுகளைத் தொடர்ந்து குறித்த பெண் விசாரணைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் இந்நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம், வேலூர் பகுதியை சேர்ந்த 29 வயதான திருமணமான ஒரு பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மிகவும் இலகுவாக கடல் வழியாக நியூஸிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக கூறி தனது வங்கி கணக்கின் ஊடாக சுமார் 8 இலட்சம் ரூபா வீதம் பலரிடம் பணம் பெற்றுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இச்சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY