
posted 1st November 2022
வெளிநாட்டில் கல்வி கற்று பட்டதாரிகளாக இருக்கும் எமது நாட்டு இளைஞர்களுக்கு பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்திருக்கும் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதுடன் இவ் திட்டத்தை உடன் அமுல் படுத்தவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி கேட்டு நிற்கின்றேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் வேண்டியுள்ளார்.
வெளிநாட்டில் கல்வி கற்று பட்டதாரிகளாக எம் நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்ட நிலையால் இளைஞர்கள் பெரும் கவலைகளுக்கு உள்ளாகி இருந்து வந்தனர்.
இது தொடர்பாக பாதிப்பு அடைந்திருந்த வெளிநாட்டு பட்டதாரி இளைஞர்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்தக்கும் கொண்டு சென்றிருந்தனர்.
இதையிட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் இது தொடர்பாக பல முறை பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளதுடன்
தற்பொழுது பிரதமராகிய தாங்கள் இதில் கவனம் செலுத்தி வெளிநாட்டில் கற்று பட்டதாரிகளாக வந்திருக்கும் இலங்கையருக்கு பட்டதாரிக்கான வேலை வாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்திருப்பதையிட்டு மகிழ்சி அடைகின்றேன்.
அத்துடன் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் இளைஞர்கள் சார்பிலும் நன்றி கூறுகின்றோம் என பிரதமருக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருப்பதுடன்
இவ் திட்டத்தை உடன் அமுல் செய்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ளும்படியும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)