வீதியில் குப்பை எறியுங்கள் - அபராதம் நிட்சயம்

பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ். மாநகர சபையை பொறுத்தவரை அனைத்து வீதிகளிலும் தினசரி குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வந்து செல்கின்றன. தூய்மை பணியாளர்கள் அந்தந்த வீதிகளில் குப்பைகளை சேகரித்தும் வருகிறார்கள். ஆனால், பலர் குப்பை வாகனங்களில் கழிவுகளை போடாமல், பொட்டலமாக கட்டி பொது இடங்களில் வீசி வருகின்றனர்.

இதுபோன்ற இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. யாராவது பொது இடங்களில் குப்பை போட்டால் உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

வீதிகள் தோறும் வீடு வீடாக தூய்மை பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும். ஏதேனும் வீதிகளுக்கு குப்பை வண்டி வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். அதை விடுத்து அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது என்று யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

வீதியில் குப்பை எறியுங்கள் - அபராதம் நிட்சயம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)