
posted 29th October 2022
மன்னார் விடத்தல்தீவு கிராமத்தின் கால்பந்தாட்ட அகடமியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் இதன் இயக்குனர் வைத்தியர் எம். மதுரநாயகம் அவர்களின் வழிநடத்தலில் அதன் முகாமையாளர் திரு. ஜெயக்குமார் நதன்ராஜ் அவர்களின் தலைமையில் விடத்தல் தீவு மீனவர் சங்க கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இவ் அகடமியின் போசகரும் மன்னார் காற்பந்தாட்ட லெஜெண்டுமான டிலாசால் சபையைச் சேர்ந்த அருட் சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியையும் விளையாட்டையும் எவ்வாறு சமாந்தரமாக கொண்டு செல்வது என தனது அனுபவத்தின் ஊடாக விளங்கப்படுத்தினார்.
இந்நிகழ்வில் இவ்வாண்டில் கல்வியிலும் உதை பந்தாட்டத்திலும் சிறந்து விளங்கிய மாணவன் செல்வன் பாலகிருஷ்ணன் சபேசன் அவர்களுக்கான தங்கப் பதக்கத்தினை அருட்சகோதர் ஸ்ரனிஸ்லோஸ் அவர்களும் இ பணப்பரிசினை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் திரு சுரேஸ் அவர்களும் வழங்கி வைத்து கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர் அழைக்கப்பட்ட விருந்தாளிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY