வன்னியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் கட்சியின் வீழ்ச்சிக்கு தலைமைத்துவம் அற்ற நிலையே காரணம்

வன்னி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு சரியானதொரு தலைமைத்துவமும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முயற்சியற்ற நிலை காணப்பட்டமையே வீழ்ச்சிக்கு காரணமாகும் என மன்னார் மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் ஓய்வுநிலை கிராம அலுவலகருமான எம்.எச்.எம். தாஜுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமானி றவூப் ஹகீம் மன்னார் மாவட்டத்தில் தனது கட்சியை புனமைப்பு , நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால முன்னெடுப்பு தொடர்பிலான கலந்துரையாடல் நோக்கமாகக் கொண்டு சனிக்கிழமை (15.10.2022) மன்னாருக்கு விஐயத்தை மேற்கொண்டிருந்தார்.

அப்பொழுது இந் நிகழ்வுக்கு தலைமைதாங்கிய மன்னார் மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் ஓய்வுநிலை கிராம அலுவலகருமான எம்.எச்.எம்.தாஜுதீன் இங்கு தனது உரையில்;

திருவள்ளுவர் அரசியலைப் பற்றி ஒரு குறலில் கூறுகின்றார். ஒரு அரசனோ அல்லது பிரதிநிதியோ மக்கள் குறைகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்தால் அந்த நாடு உருப்படியாக இருக்கும்.

அவ்வாறு செயல்படாவிட்டால் அந்த நாடு குட்டிச் சுவராக மாறிவிடும் என்பதாகும்.

நாள்தோறும் மக்களை சந்திப்பது பொருத்தமற்றது என நினைத்துவிடக் கூடாது. முதலில் ஒரு அரசியல் கட்சியின் வரலாறு அறிந்திருக்க வேண்டும்.

வரலாரை அறிந்தால் அதன் வாழ்வை அறிந்து கொள்வீர்கள் வாழ்க்கையை அறிந்தால் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடியும் வளர்ச்சியை அறிந்தால் அதன் உச்சத்தை அறிந்து கொள்ள முடியும். அதன் வீழ்ச்சியை அறிந்தால் இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ள முடியும். இதுதான் முஸ்லீம் காங்கிரஸ்.

முஸ்லீம் மக்கள் அநாதைகளாக ஆகிவிடக்கூடாது என்ற சிந்தiனியில் உருவாக்கப்பட்டதுதான் இக் கட்சியாகும்.

இக் கட்சி உச்சத்தில் வந்து ஒரு ஆட்சியை உருவாக்கவும் வீழ்த்தவும் தன்மையில் கொண்டிருந்தது.

ஆனால் பின் இக் கட்சி வீழ்ச்சி கண்டது. இதற்கான காரணமும் எமக்குத் தெரியும்.

இக் கட்சியை கீழ் நோக்கியும் மேல் நோக்கியும் பார்த்தால் அங்கு பிழை இருக்கின்றது என்பது புலனாகின்றது.

இக் கட்சியின் சரி பிழைகளை சுட்டிக்காட்டி இக் கட்சியை தொடர்ந்து அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வது பொருத்தமற்றது.

இப்பொழுது எம்மிடன் உள்ள முக்கிய நோக்கம் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை புனரமைப்புச் செய்ய வேண்டி கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

வன்னி மாவட்டத்தை பொருத்தமட்டில் மூன்று மாவட்டங்கள் சேர்ந்துதான் வன்னித் தேர்தல் தொகுதியாக இருக்கின்றது.

ஆகவே, மன்னார் , வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பிரதேச செயலக மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் அத்துடன் வன்னி மாவட்டத்தில் ஒரு தலைமைத்துவத்தை நாம் அமைக்க வேண்டும்.

இங்குள்ள மக்கள் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை வெறுத்து ஒதுக்கவில்லை. ஆனால் இங்கு அதாவது வன்னி மாவட்டத்தில் சரியான ஒரு தலைமைத்துவம் அற்ற நிலையே இங்கு காணப்பட்டமையால் இக் கட்சி வீழ்ச்சியைக் கண்டதுதான் உண்மை.

பலர் குறுக்கு வழியில் சென்று தேர்தலில் வெற்றிக் கொண்டார்கள். ஆனால் நமது தேசிய தலைவர் குறுக்கு வழியில் சென்று தேர்தலில் வெற்றிக் கொள்ள விரும்பாதவர்.

ஆகவே எம்மிடன் கடந்த காலங்களில் முயற்சியும் சரியான தலைமைத்துவமும் இல்லாத தன்மையை உணர்ந்தவர்களாக இனிவரும் காலங்களில் நாம் ஒன்றினைந்து சரியான ஒரு நிர்வாகத்தை இங்கு உருவாக்கி எமது கட்சியை வளர்த்தெடுப்போம் என தெரிவித்தார்.

வன்னியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் கட்சியின் வீழ்ச்சிக்கு தலைமைத்துவம் அற்ற நிலையே காரணம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY