யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதிக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (29), சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபாவின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த, மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கை, நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், விவசாய பீடத்தின் பீடாதிபதியும், விவசாய இரசாயனவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா விவசாய இரசாயனவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதிக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY