
posted 25th October 2022
மேஜர் ஜெனரல் ரவி இரட்ணசிங்ம் சவால் கிண்ணத்திற்க்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 3:00 மணியளவில் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம் பெற்றது.
இலங்கை இராணுவத்தின் 551 வது படைப்பிரிவிற்க்கு உட்பட்ட பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி பிரிதேச செயலர் பிரிவுகளுக்குள் 18 கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரவி ரட்ணசிங்கம் கிண்ணத்திற்க்கான உதைபந்தாட்ட போட்டியில் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, 55 வது படை பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மகேந்திர பிரணாந்து, பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி, பருத்தித்துறை நகரசபை தலைவர் இருதயராசா, பருத்தட்துறை பிரதேச சபை தவிசாளர் சா. அரியகுமார், இலங்கை இராணுவத்தின் 551 படைப்பிரிவின் பிரிகேடியர் சிந்திக்க விக்கிரமசிங்க, கேணல் ரூவன் பெர்ணாண்டோ, உட்பட்டவர்கள் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்களால் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றவர்களுக்கான ரூபா ஒரு இலட்சம் பணப்பரிசு வெற்றிக் கேடயம் என்பன வழங்கப்பட்டன.
குறித்த போட்டிகள் கடந்த 15/10/2022 அன்று ஆரம்பமாகியிருந்தன.
இன்றை இறுதிப் போட்டியில் சிவாநந்தா விளையாட்டுக்கழகமும், கலைமதி விளையாட்டுக் கழகமும், மோதிக் கொண்டதில் நான்கிற்க்கு நான்கு கோல்களை போட்டு சமநிலையில் நிறைவடைந்த நிலையில் தண்ட உதை மூலம் தீர்மானிக்கப்பட்ட இறுதி முடிவில் கலைமதி விளையாட்டுக் கழகம் நான்கு கோல்களையும், சிவானந்தா விளையாட்டுக் கழகம் இரண்டு கோல்களையும் போட்டு கலைமதி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுக் கொண்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY