
posted 17th October 2022

மத்திய சபைகளுக்கு பிணக்குகள் ஆற்றுப்படுத்தப்படுவதற்கு வசதி அளிக்கும் வகையில் பிரதேச செயலகங்கள் தோறும் முறைப்பாட்டு பெட்டிகள் ஏற்படுத்தப்படு உள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை மத்திய சபைகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் தோறும் மத்திய சபைகளுக்கான பிணக்குகளை ஆற்றுப்படுத்துவதற்கான முறைப்பாட்டு பெட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் மக்கள் தங்களது பிணக்குகள் குறித்த மனுக்களை தத்தமது பிரதேச செயலகங்களில் வைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த சபைகளுக்கான முறைப்பாட்டுப் பெட்டிகளில் இடுவதன் மூலம் இணக்கப்பாட்டுக்கான கலந்துரையாடலை முன்னெடுக்க வசதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)