முன்னாள் அமைச்சர் ரிஸாட் அம்பாறை விஜயம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஸாட் பதியுதீன் நீண்ட இடைவெளைக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து கட்சி ஆதரவாளர்களை சந்தித்ததுடன் பல்வேறு பொது நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

குறிப்பாக சம்மாந்துறையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ரிஸாட் பதியுதீன் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விளக்கங்களையும் அளித்தார்.

அதேவேளை கடந்த அரசாங்கத்தினால் குறிப்பாக ராஜபக்ஷக்களால் தாம் சிறையில் அடைக்கப்பட்டு அங்கு சிறையில் பெற்ற அனுபவங்களையும், அடைந்த துன்ப துயரங்களையும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பகிர்ந்து கொண்டார்.

அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகி இன்று கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் துரோமிளைத்துவரும் திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபீன் உடனான முரண்பாடுகள் தொடர்பிலும் அவரது துரோகத்தனம் தொடர்பிலும் பல்வேறு கருத்தாடல்களின் போது பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

பொத்துவில், அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, மருதமுனை முதலான பல்வேறு பிரதேசங்களிற்கும் விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களிலும் பொது நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், இளைஞர் சந்திப்புக்களிலும் தலைவர் ரிஸாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர் ரிஸாட் அம்பாறை விஜயம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY