மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு

கடற்தொழில் தலைமை காரியாலயம் அதிகரித்துவரும் மீன்பிடி கலங்களின் விலை உயர்வு மீனவர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தினைக் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடு ஒன்றை முன் மொழிந்துள்ளதாக உதவி பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க மன்னார் மீனவர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்குரிய கூட்டமானது, செவ்வாய்க் கிழமை (04) கடற்றொழில் மற்றும் நீரியல் வள மன்னார் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் வெளிக்கள அலுவலர்களுக்கான கூட்டம் ஒன்று சரத் சந்திரநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இம் மாவட்டத்தின் கடல்சார் உதவி பொறியியலாளர் திரு.வி. சிறீதரன் உட்பட மாவட்டத்தின் 06 கடற்றொழில் பிரிவுகளுக்கு பொறுப்பான கடற்றொழில் பரிசோதர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வளவு காலமாக இருந்த படகுகளின் விலைகளை விட தற்போது கிட்டத்தட்ட 6 இலட்சத்தால் கூடியிருப்பதால் இவ் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு ஒன்றை தலைமை காரியாலயம் ஏற்பாடு ஒன்றை செய்துள்ளதாக உதவி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

எனவே,

  • பாவிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளைப் பதிவு செய்ய அனுமதி கிடைத்துள்ளது
  • இவ்வாறு பதிவதால் வசதியற்ற மீனவர்கள் நல்ல நிலையில் உள்ள படகுகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்து தங்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள முடியும்

எனவே, மாவட்டத்திலுள்ள ஏராளமான பதியப்படாத படகுகளை பதியப்பட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், இதற்காக மீனவர்கள் தங்கள் படகுகள் கடலோட தகுதியானது என உறுதிப்படுத்த கடல்சார் உதவி பொறியியலாளரின் கடற்பகுதி சான்றிதழை பெற்று கடற்றொழில் பரிசோதகரிடம் சமர்ப்பித்து தங்கள் படகுகளை பதிவு செய்து கொள்ளலாம் என உதவி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மாவட்டத்தின் இறங்குதுறையில் மீனவர்களின் தொழிலுக்கு இடையூறாக கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் படகுகளில் பலவற்றையும் மீண்டும் பிரயோசனப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதனையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY