
posted 11th October 2022
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் லெப் மாலதி அவர்களின் நினைவு தினம் இன்றைய தினம் கோப்பாயில் மாலதி வீரச்சாவை தழுவி கொண்ட இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது,
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாட்டு பொது கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் 10.10.2022 மாலை கோப்பாயில் உள்ள அவரது நினைவுத்தூபியின் முன்றலில் பொது கட்டமைப்பு உறுப்பினர் தவத்திரு வேலன் சுவாமிகளால் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)