மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் 30.10.2022 காலை ஆரம்பிக்கப்பட்டன.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே, விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணி குழுவினரால் துயிலும் இல்ல வளாகம் சிரமதானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

தேராவில் துயிலும் இல்ல வளாகத்தில் காலை 9.30 மணியளவில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களின் பெற்றோர், நலன்விரும்பிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் இந்த சிரமதானப் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)