
posted 26th October 2022
தீபாவளி தினமாக காணப்பட்டபோதும் வசந்தபுரம் கிராம மக்கள் ஒன்றுக்கூடி எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும் நடமாடுவது எங்கள் உரிமை பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை ஒன்று கூடுவது எங்கள் உரிமை என கோரிக்கைகளை முன்வைத்தpருந்த நிலையில் அவ் கிராமத்தில் வீதியோரத்திலிருந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
தமிழ் மக்களின் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தும் முகமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள;; தமது சாத்வீகமாகன ஜனநாயகமான நூறுநாட்கள் செயல்முனைவின் விழப்புணர்வு போராட்டம்; ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பpத்து திங்கள்கிழமை (24.10.2022) 85 வது நாளை எட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் நடைபெறும் நூறு நாட்கள் இவ் செயல் முனைவானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரனையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இனையம் (போரம்) மற்றும் 'மெசிடோ' நிறுவனங்களின் ஏற்பாட்டில் இவ் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மன்னார் மாவட்டத்தில் பேசாலை பகுதியை அண்டிய வசந்தபுரம் என்னும் கிராமத்தில் திங்கள் கிழமை (24.10.2022) 85 வது தினமாகிய அன்று நடைபெற்ற இவ் கவனயீர்ப்பு போராட்டமானது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இனையம் (போரம்) அனுசரனையுடன் நடைபெற்றது.
இப் போராட்டம் நடைபெற்ற அன்று தீபாவளி தினமாக காணப்பட்டபோதும் இவ் வாழ் மக்கள் ஒன்றுக்கூடி எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும் நடமாடுவது எங்கள் உரிமை பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை ஒன்று கூடுவது எங்கள் உரிமை என கோரிக்கைகளை முன்வைத்தpருந்த நிலையில் அவ் கிராமத்தில் வீதியோரத்திலிருந்து இவ் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)