மன்னாரில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை புனரமைக்க றவூப் ஹகீம் மன்னார் விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமானி றவூப் ஹகீம் மன்னார் மாவட்டத்தில் தனது கட்சியை புனமைப்பு , நிர்வாக கட்டமைப்பு . எதிர்கால முன்னெடுப்பு தொடர்பிலான கலந்துரையாடல் நோக்கமாகவும்,

மன்னார் மாவட்டத்தின் பாடசாலைகளில் கல்வி பயிலும் இருமாணவர்கள் அதாவது வட மாகாண மட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெற்றவர்களையும்,

மன்னார் பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு கொண்டு வந்த பெருமையை முன்னிட்டும் இதற்கான கௌரவிப்பு விழா ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நோக்குடனும் மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

சனிக்கிழமை (15.10.2022) வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மன்னார் எருக்கலம்பிட்டி 5ம் கட்டை சந்தி என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மன்.கொண்டச்சி முஸ்லீம் மகா வித்தியாலய மாணவன் செல்வன் கபீர் சாபித்து வட மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்கள் வென்றமைக்கும்,

மன் பெரிய மடு பாடசாலையைச் சேர்ந்த செல்வி அஸீம் அனிக்கா வட மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றமைக்கும்,

அத்துடன் 21 உறுப்பினர்களைக் கொண்ட மன்னார் பிரதேச சபையில் இருவர் மட்டுமே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களாக இருக்கின்றபோதும் தனது திறமையால் மன்னார் பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு உட்படுத்தி இச் சபைக்கு தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமைக்காக தவிசாளர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் ஆகிய மூவரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் றவூப் ஹகீம் அவர்களால் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்த்தரணியுமான உனைஸ் பாரூக் , சிரேஷ்ட சட்டத்தரணியும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான எம்.எம். சபூர்தீன் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மன்னாரில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை புனரமைக்க றவூப் ஹகீம் மன்னார் விஜயம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)