மன்னாரில் பொலிஸ் திணைக்களத்துக்கு பாராட்டை ஈட்டிக்கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்.

பொருளாதார சிக்கல் உள்ளக் காலக்கட்டத்திலும் கைக்கு எட்டிய பணத்தில் மோகம் கொள்ளாது அதை கையாள விரும்பாத பொலிஸ் கான்ஸ்டபில் உரியவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தனது நேர்மையை எண்பித்த சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது 2022.10.24 திங்கள் கிழமை அன்று காலை ஆறு மணியளவில் தள்ளாடி வீதியில் பொலிஸ் உத்தியோகத்தர் (இல. பி.எஸ். 57943) சமிந்த திலக்குமார என்பவர் ஒரு பணப்பையினை கண்டெடுத்துள்ளார்.

அவ் பணப்பையினுள் பத்தாயிரம் ரூபாவும் 2 மோட்டர் சைக்கிள் ஆவணங்களும் அடையாள அட்டை ஏரிஎம் காட் பெற்றோல் காட் என்பன காணப்பட்டுள்ளது.

இவற்றை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு அவ் பணப்பைக்குள் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது;.

இவ் பணப்பையை தொலைத்தவர் மன்னாரில் ஒரு பிரபல பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவன் என்றும் இவர் மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த சிவசம்பு வர்மியன் எனவும் இனம்காணப்பட்டுள்ளார்.

பின் இவர் மன்னார் பொலிஸ் பகுதிக்கு அழைக்கப்பட்டு இவரை பணப்பையை சரிபார்க்கப்பட வைக்கப்பட்டதுடன் மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத்விதானகே மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் மஸ்இம்புள்ள முன்னிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உரியவரிடம் ஒப்டைக்கப்பட்டது

இவ் பொருளை கண்டெடுத்த பொலிஸ் உத்தியோகத்தரை அதிகாரிகளும் உரிமையாளரும் பாராட்டியதுடன் நேர்மையுள்ள பொலிசாரும் இருக்கின்றார்கள் என போற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் பொலிஸ் திணைக்களத்துக்கு பாராட்டை ஈட்டிக்கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)