மன்னாரில் கடற்கரையை நம்பி வாழ்வோர் அதிகம். கடல் சுற்றாடல் பாதுகாப்பு அவசியம் அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல்

-மன்னார் மாவட்டத்தில் சுமார் பதினொராயிரத்துக்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடலை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றன ஆகவே நாம் எமது பகுதி கடல் சுற்றாடல் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உண்ட என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாற தெரிவித்தார்.

கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் எண்ணெய் கசிவு முன் ஆய்த்த தொடர்பான பயிற்சி பாசறை மன்னாரில் ஆஹாஸ் ஹொட்டலில் வியாழக்கிழமை (27.10.2022) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தொடர்ந்து உரையாற்றுகையில்

கடல் சுற்றாடல் பாதுகாப்பை முன்னெடுக்கும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் இதற்கான திட்டத்தை மேம்படுத்தும் முகமாக உதவிக் கரம் நீட்டியுள்ள உலக உணவு திட்ட அமைப்புக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.

எமது மன்னார் மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடியை நம்பியே வாழந்து கொண்டு இருக்கின்றார்கள்.

அத்துடன் இவ் மாவட்டத்தில் அதிகமான குடும்பங்கள் நேரடியாக மீன்பிடியில் ஈடுபடாத போதும் இவ் தொழிலை நம்பியே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே இப் பகுதியில் கடல் சுற்றாடல் பாதுகாப்பை மிக அவசியமாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உண்டு.

நாங்கள் கண்ட அனுபவம் அன்மையில் நீர்கொழும்பில் கடலில் ஏற்பட்ட ஒரு அனர்த்தம் காரணமாக எங்கள் மாவட்டத்தின் மீனவர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர்.

குறிப்பாக வங்காலையிலிருந்து அரிப்பு சிலாவத்துறை கடல் கடற்கரைப் பகுதிகள் மிக அச்சநிலையில் காணப்பட்டன.

நான் தனிப்பட்ட முறையில் இவ் பகுதிக்கு அந்நேரம் சென்று கவனத்துக்கு எடுத்த நிலையில் இது தொடர்பாக கடற்படை அதிகாரிகள் மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையுடன் தொடர்புகள் எற்படுத்தி இதன் நிலைமையை கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

இவ் சம்பவம் எங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு அற்ற நிலைமையாகவே காணப்பட்டபோதும் சில தினங்கள் மக்கள் மீன்களை உண்ணலாமா உண்ணக்கூடாதா என்ற நிலையில் காணப்பட்டாலும் அச்சநிலை அந்நேரம் காணப்பட்டது.

ஆகவே இன்றைய இவ் பாசறை எங்களுக்கு ஒரு நன்மை பயக்கும் செயல்பாடாக இருப்பதை நாங்கள் உணர வேண்டும்.

எதிர்காலத்தில் திடீரென இவ்வாறு ஒரு சம்பவம் எங்களுக்கு ஏற்படுமாகில் தற்பொழுது இவ் பாசறையின் மூலம் என்ன செய்ய வேண்டும் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என பல விடயங்களை நாங்கள் தெரிந்து கொள்ள ஏதுவாகியுள்ளது.

அத்துடன் இந்த கடல் சுற்றாடல் பாதுகாப்புக்கு எங்கள் கடமைகள் என்ன என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஆகவே இங்கு ஒன்றுகூடியுள்ள அதிகாரிகளாகிய நீங்கள் இங்கு தெரிவிக்கும் கருத்துக்களை உள்வாங்கி கடல் சுற்றாடல்; பாதுகாப்பு இவ் திட்டத்துக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என நம்புகின்றேன்.

இது எமது மாவட்த்துக்கு மட்டுமல்ல எமது நாட்டின் அனைத்து கடல் சுற்றாடல் பாதுகாப்பாக அமைய வேண்டிய அவசியமாக உள்ளது.

எமது மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது பலதரப்பட்ட பொருட்களை கண்டெடுத்து என்ன பொருள் என்ன மாத்திரைகள் என மற்றவர்களிடம் கொடுத்து ஆராயும் தன்மை இன்றும் நிலவி வருவதால் நாம் தொடர்ந்து இவ்வாறான கடல் சுற்றாடலை பாதுகாக்க வேண்டி இருக்கின்றது.

ஆகவே இங்கு இது தொடர்பாக விளக்கம் தருவார்கள் நாம் இவற்றை கவனத்தில் எடுத்து செயல்பட முனைவோம் என இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் கடற்கரையை நம்பி வாழ்வோர் அதிகம். கடல் சுற்றாடல் பாதுகாப்பு அவசியம் அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY