மக்கள் நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா...!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் அதன் தலைவர் திரு அசோக் தலமையில் பொற்பதியிலுள்ள அதன் தலமையகத்தில் இடம் பெற்றது.

இதில் முதல் விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு நிகழ்வாக மங்கள விளக்கு விருந்தினர்களால் ஏற்றப்பட்டது. தொடர்ந்து வரவேற்ப்பு நடனம், தலமை உரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தொழில் முயற்சிக்கான உபகரணங்கள், உலர் உணவு பொதிகள், சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு என்பன இடம் பெற்றது.

இதில் சமூக செயற்பாட்டாளர் வேந்தன், மருதங்கேணி கோட்ட கல்வி பணிப்பாளர் திரு சிறிராமச்சந்திரன், தேசிய இளைஞர் சேவை மன்ற யாழ்ப்பாண பிரதிநிதி உ. நிதர்சன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்.ஆ. சுரேஸ்குமார், யா. பொற்பதி றோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபர் திரு. கதிர்காமநாதன், மற்றும் மக்கள் நலன்புரி சங்க நிர்வாகிகள், நலன் விரும்பிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மக்கள் நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா...!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY