
posted 17th October 2022
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்ப்பாணம் மாநகரம் பொம்மை வெளியில் முன்னெடுத்த நடவடிக்கையில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதே இடத்தைச் சேர்ந்த 26, 34 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.
தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)