பேசாலை சென் பற்றிமா கல்லூரி சாதனைப் படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

மன்னார் மாவட்டத்தில் பேசாலை மன்.பற்றிமா தேசிய பாடசாலை கல்வியோடு விளையாடடிலும் தற்பொழுது சிறந்து விளங்கி வருகின்றது என்பது நிறுபனமாகி வருகின்றது.

அந்தவகையில் இவ் நடப்ப வருடம் 2022 ஆம் ஆண்டில் இவ் கல்லூரியைச் சார்ந்த சுமார் 46 மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் இணைந்து மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளனர்.

குறிப்பாக பூ பந்தாட்டம் மேசை பந்தாட்டம் மெய்வல்லுனர் திறனாய்வு ஆகிய போட்டிகளிலேயே சாதனைப் படைத்தவர்களாக காணப்படுகின்றனர்.

இவ் பாடசாலையானது கடந்த ஐந்து வருடங்களாக பூ பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ச்சியான சாதனையைப் படைத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ் சாதனைகள் படைத்துள்ள மாணவர்களையும் இவர்களை பயிற்றுவித்தோரையும் கௌரவிக்கும் முகமாக கடந்த வெள்ளிக்கிழமை (21.10.2022) பேசாலை மன்.பற்றிமா தேசிய பாடசாலை சமூகம் பெருவிழாவை முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மற்றும் பேசாலை சென் பற்றிமா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளில் அதிபராக இருந்து கல்வி ஒழுக்கத்துடன் விளையாட்டிலும் மாணவர்களை சாதனையாளர்களாக ஆக்குவதில் முழுக் கவனம் செலுத்தி வந்த டிலாசால் அருட்சகோதரரும் இவ் பாடசாலைகளின் ஓய்வுநிலை அதிபருமான அருட்சகோதரர் ஸ்ரணி பிரதம அதிதியாகவும்

மன்னார் மாவட்டத்தில் ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றுபவரும் மன்னார் மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தை வளர்த்தெடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துபவருமான வைத்திய கலாநிதி எம்.மதுரநாயகம் பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி டிக்சன் அடிகளார் உட்பட பேசாலை ஓய்வுநிலை விளையாட்டு அதிகாரிகளாக பணியாற்றியவர்களும் இவ் விழாவில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்

சாதனைப் படைத்த மாணவர்களுடன் அவர்களின் பெற்றோரும் மேடைக்கு தங்கள் பிள்ளைகளுடன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதும் ஒரு சிறந்த அம்சமாக காணப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேசாலை சென் பற்றிமா கல்லூரி சாதனைப் படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)