
posted 8th October 2022
மன்னார் மறைமாவட்டத்தில் மூத்த பங்கும் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பங்காகிய பேசாலை பங்கிலிருந்து முதலாவது டிலாசால் அருட்சகோதராக நவசந்நியாசத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக புனித டிலாசால் சபையானது மன்னார் மாவட்டத்தில் கல்வி பணியுடன் மன்னார் மாவட்ட மாணவ சமூகத்தில் கல்வி ஒழுக்கம் விளையாட்டு மற்றும் இறை பக்தி போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.
இதனால் இம் மாவட்டத்தில் அன்று தொட்டு இன்று வரை இச் சபையில் இளைஞர்கள் இணைந்து தங்கள் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் பேசாலையிலிருந்து இச் சபைக்கு முதன்முறையாக ஒருவர் இணைந்து தனது நவசந்நியாசியாக இணைக்கப்பட்டுள்ளார்.
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயப் பங்கைச் சேர்ந்தவரும் பேசாலை 8ம் வட்டாரத்தைச் சார்ந்த திரு பீற்றர் றெவ்வல் திருமதி கமலி மிராண்டா ஆகியோரின் மகன் அருட்சகோதரர் திவ்வியன் றெவ்வலே சனிக்கிழமை (08.10.2022) காலை முட்டுவெல புனித வளனார் ஆலயத்தில் நடைபெற்ற திருச்சடங்கின் ஊடாக இவர் சபைக்குரிய ஆடை அணிவிக்கப்பட்டு தனது நவசந்நியாசத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
இவர் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை மன் பேசாலை புனித பற்றிமா தேசிய பாடசாலையில் கற்றவராவார்.
இவரின் கல்வி ஒழுக்கம் போன்ற நற்செயல்களை இனம் கண்ட இப் பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வந்த டிலாசால் சபையைச் சார்ந்த அருட்சகோதரர் ஸ்ரணி அவர்களால் இவர் இச் சபையில் இணைவதற்காக அனுப்பப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருடன் இன்றைய தினம் (08) மன்னார் மாவட்டத்தில் வங்காலையிலிருந்து அருட்சகோதரர் நிலோசன் மற்றும் பெரிய பண்டிவிரிச்சானிலிருந்து அருட்சகோதரர் அபிஷன் ஆகிய இருவரும் அருட்சகோதரராக இச் சபையில் நவசந்நியாசத்தில் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY