பாடசாலைக்கு  வழங்கப்பட்ட நன்கொடை

சம்மாந்துறை கல்வி வலயத்தில் இயங்கும் நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சவளக்கடை 7ம் கிராம அதிகஷ்ட பாடசாலையான கமு/சது/ கணேஷா வித்தியாலயத்திற்கு, போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் கணணி என்பன வழங்கி வைக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் வை.எல். சுலைமா லெவ்வையின் முயற்சியின் கீழ், குறித்த பொருட்கள் பாடசாலை அதிபர் கே. பேரானந்தம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், நலன் விரும்பிகள், ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், இப்பாடசாலைக்குத் தேவையான சகல பௌதீக வளங்களையும் விரைவில் நிவர்த்தி செய்து தருவதாகவும், முதற் கட்டமாக 100 இறப்பர் கதிரைகளையும் மற்றும் பாடசாலை சுற்று மதில் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் உதவித் தவிசாளர் சுலைமா லெவ்வை இங்கு கருத்து தெரிவித்தார்.

பாடசாலைக்கு  வழங்கப்பட்ட நன்கொடை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY