பலவகைச் செய்தித் துணுக்குகள் - வாஸ் கூஞ்ஞ

வாஸ் கூஞ்ஞ

இஞ்சி மன்னாரிலும் பயிரிடலாம்

மன்னார் இரணை இலுப்பைக்குளத்தில் இஞ்சி உற்பத்தி அறுவடை விழாவில் செவ்வாய் கிழமை (04) கலந்துகொண்டு தெரிவித்த விவசாய திணைக்கள பூந்கனிவியல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி இருதயநாதன் அர்ஜின் குரூஸ்;

இஞ்சியானது ஈரவலயத்திற்கும், இடைவெப்ப வலயத்திற்குமான பயிராகும். ஆனால், இப்போது, இப்பயிரை மிதவெப்ப வலயத்திலும் வளர்க்கக்கூடியதாக இருக்கின்றது.

இஞ்சியானது பல ரகமான விதங்களில் வேறுபட்ட பாவனைக்கு உபயோகப்படும் இப்பயிரை எமது நிலங்களில் வளர்க்க கூடியதாக உள்ளது மகிழ்ச்சிகரமாக உள்ளது. சீனர்கள் இதனை ஆயள்வேத மருத்துவத்தில் பயன்படுத்தனர்.

இலங்கையில் இஞ்சியானது குருநாகல், கண்டி, கம்பளை, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றது.

எமது ஆலோசனைக்கமைய, இஞ்சிப் பயிர் செய்கையானது 8டிலிருந்து 10 மாதங்களில் அறுவடையைச் செய்ய முடியும். மேலும், ஏறத்தாள அதிகளவாக 18 மெற்றிக் தொன் 1 ஹெக்டர் நிலத்தில் அறுவடை செய்ய முடியுமென திருமதி இருதயநாதன் அர்ஜின் குரூஸ் நம்பிக்கை தெரிவித்தார்.



உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் - அருட்சகோதரி மேரி றொசாந்தி

சிறுவருடையதும், முதியோருடையதும், ஆசிரியருடையதும் தினத்தையும் வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலையில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற போது அருட்சகோதரி மேரி றொசாந்தி தெரிவித்ததாவது;

எமது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாகப் பார்த்து உருவாக்கும் ஆசிரியர்கள் பெரிய பங்கு இச் சமுதாயத்திற்கு பெரும்பங்கு வகிக்கின்றார்கள்.

ஒரு ஆசிரியரினால் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட உங்கள் பிள்ளைகளை இந்தச் சமுதாயத்தில் எந்த நிலைகளுக்கும் உருவாக்க முடியும்.

அவ்வாறாக சமுதாயத்தில் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நாம் இன்று விழா எடுக்கின்றோம்.

எனவே, பெற்றோராகிய நீங்களும் இவ்வாறு ஆசிரியர்களுடன் ஒன்று சேர்ந்து கை கோர்த்து பிள்ளைகளின் முன்னேற்றத்தில் செயற்படுவோம்.


பலவகைச் செய்தித் துணுக்குகள் - வாஸ் கூஞ்ஞ

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY