
posted 12th October 2022
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களால் 2000 கிலோ கிராமுக்கு அதிக எடைகொண்ட சுறாமீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. ஞாயிறு இரவு குறித்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
14 சுறாமீன்கள் பிடிபட்டதாகவும் அவற்றின் பெறுமதி இருபது இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மீன்கள் குளிரூட்டப்பட்ட மீன் வாகனங்கள் ஊடாக கொழும்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக பருத்தித்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)