பதவி இராஜினாமா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட மத்திய குழு செயலாளர் ஜுனைடீன் மான்குட்டி தமது செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் உயர்பீட உறுப்பினரான ஜுனைடீன் மான்குட்டி, கட்சிக்கான நேரடி அரசியல் செய்வதற்கு இந்த மாவட்ட செயலாளர் பதவி தடையாய் இருந்ததன் காரணமாகவே தாம் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாம் மாவட்ட செயலாளராகப் பதவி வகித்த காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், செயலாளர் தேசிய அமைப்பாளர் மற்றும் கட்சிப் போராளிகள் தமக்களித்த கௌரவத்திற்கும், மற்றும் ஒத்துழைப்பிற்கும் அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் வளர்ச்சிக்காகவும், எதிர்கால செயற்பாடுகளுக்காகவும் முழு மூச்சுடன் செயற்படப் போவதாகவும் ஜுனைடீன் மான்குட்டி உறுதிப்படத்தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீவிர போராளியும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி இராஜினாமா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)