படுவான்கரைபெருநிலத்திற்கு வருகை தரும் ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்வு!

ஆசிரியர் தினமான இன்று அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலய மாணாக்கர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை சமூகம் இணைந்து எழுவான்கரை பகுதியில் இருந்து படகு மூலமும், மண்முனை, பட்டிருப்பு பாலங்கள் ஊடாகவும் படுவான்கரைப் பெருநிலத்திற்கு வருகை தரும் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களையும் அதிபர்களையும் வரவேற்று கௌரவப்படுத்தும் நிகழ்வு அம்பிளாந்துறை துறையடி, மண்முனைல்பாலம், பட்டிருப்புப்பாலம் ஆகிய மூன்று இடங்களிலும் இடம்பெற்றது.

இதன்போது மாலைகளை அணிவித்து சகல ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்!

கடந்த 2004, ம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர் தினமான அக்டோபர் 6, ம் திகதியில் இந்த நடைமுறையை அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலய மாணாக்கர்களும், பழைய மாணவர்களும், பாடசாலை சமூகமும் இணைந்து தொடர்ந்து கடந்த 18, வருடங்களாக இதனை மேற்கொண்டுவருவது வழமையாகும்.

தமது பாடசாலை ஆசிரியர்களை மட்டுமன்றி மண்முனைப்பாலம், அம்பிளாந்துறை படகு சேவை, பட்டிருப்பு பாலம் ஊடாக வருகை படுவான்கரைப் பகுதிகளுக்கு வருகை தரும் அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டு வரும் நடைமுறையை இலங்கையில் அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியலாய மாணவர்களும் பழைய மாணவர்களும் மட்டுமே தொடர்ச்சியாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

படுவான்கரைபெருநிலத்திற்கு வருகை தரும் ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்வு!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY