
posted 12th October 2022
தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழிலுக்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் துணைபோவதாக கூறி முல்லைத்தீவு மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசம் ஒருங்கிணைந்து உதவி பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கோரி கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவரும் போராட்டங்களின் விளைவுதான் எனக் கருதத் தோன்றுகின்றது இந்த இடமாற்றம்.
இவ்விடமாற்றங்களாவன, மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளர், திரு. சரத் சந்திரநாயக்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வி.கலிஸ்ரன் மன்னார் மாவட்டத்திற்கும் இடமாற்ற பட்டுள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)