
posted 23rd October 2022
மறைந்த பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் இறுதிக்கிரியைகள் இன்று (ஞாயிறு) நடைபெற்றுள்ளன.
தமது 88 ஆவது வயதில் காலமான ஈழத்தின் சிறுகதையாளர், நாவலராசிரியர், இலக்கிய ஆய்வாளர் எனப் பெயர்பெற்ற அன்னாரின் மறைவுக்கு ஈழத்து இலக்கிய வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஜனரஞ்சக எழுத்தாளரும், முற்போக்கு சிந்தனையாளருமான சாஹித்திய ரத்னா விருது பெற்ற அமரர் தெளிவத்தை ஜோஸப், மட்டக்குளி மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இதேவேளை அன்னாருக்கு மரியாதை செலுத்து முகமாக மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்ற கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றின்போது அமரர் தெளிவத்தை ஜோஸப்பின் உருவப்படத்திற்கு தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY