தீபாவளி வாழ்த்து - மருதபாண்டி ராமேஸ்வரன்

ஒளி பிறந்து, இருள் அகன்று தீபாவளித் திருநாளை தேசமெங்கும் வழி பிறக்கும் நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம். மனதிலிருக்கும் நல்ல எண்ணங்களை வளர்த்து சமூக நலன்கள் நோக்கியதாக நல்ல மனப்பாங்கை வளர்க்கும் உள்ளமாக அகவிளக்கு இறை அருள் மூலம் பிரகாசிக்க இந்த தீபாவளி நாளில் தீபம் ஏற்றி மகா விஷ்ணு பெருமானை மனதார பிரார்த்தித்துக் கொண்டு அனைத்து இந்து மக்களுக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அனைத்து மக்களுக்கும் நல்ல பிரகாசமாக அவர்களது வாழ்வு சிறப்படையவும் இந்த தீபாவளி தினத்தில் நாம் ஏற்றும் தீபம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பக்தியையும் தரக்கூடியதாக அமைய நாம் அனைவரும் தீபம் ஏற்றி பிரார்த்திப்போம். முழு உலக வாழ் மக்களும் ஷேமமாய் இருக்க இந்த தீபாவளி நன்னாளில் குடும்ப உறவுகளுடன் தீபம் ஏற்றி மகா விஷ்ணுவை பிரார்த்திப்போமாக.

மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அகல வேண்டும். நல்ல எண்ணங்கள் நிரம்ப வேண்டும். அனைவரும் தீர்க்க ஆயுளுடன் சுபிட்சமாக வாழ இந்த தீபாவளி நாளில் நாங்கள் ஒன்று சேர்ந்து இலங்கையர்களாக அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நல்ல பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வாழ்வில் புத்தொளி வீச வேண்டும். எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் நாம் என்றும் விழிப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி வாழ்த்து - மருதபாண்டி ராமேஸ்வரன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY