
posted 23rd October 2022
தீபாவளியில் அனைவர் வாழ்விலும் தீப ஒளி ஒளிர்ந்து, துன்பங்கள் பனிபோல உருகி, இன்பங்கள் மழைபோல் பொழிய ஆசிப்போம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்கள் மற்றும் குருக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது தீபாவளி வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில் துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி சூறாவளியாய் விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும், நன்மைகள் பல பெற கொண்டாடுவோம் இந் நன்நாளை.
மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட, என்றும் இன்பம் இல்லத்தில் தங்கிட வளங்கள் பெருகி நலமாய் வாழ்ந்திட, உறவுகள் அனைவருக்கும் தீப ஒளி நல்வாழ்த்துக்களை பறிமாறுவோம்.
இந்த தீபாவளியில் அனைவர் வாழ்விலும் தீப ஒளி ஒளிர்ந்து, துன்பங்கள் பனிபோல உருகி, இன்பங்கள் மழைபோல் பொழிய ஆசிப்போம்.
துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, அன்பு பொங்க, மகிழ்ச்சி நிறைய சகலவிதமான சந்தோஷங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வந்தடைய எல்லாம் வல்ல கடவுளை வேண்டி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறி நிற்கின்றேன் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY