
posted 5th October 2022
உப உணவுப் பயிற்செய்கை செய்த விவசாயிகளின் திறமைகளைக் கண்டறிய மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் சென்ற குழுவினர் மன்னார் கல்மடு படிவம் இரண்டு பகுதிக்குச் செவ்வாய் கிழமை (04) அன்று சென்றது.
அங்கு சென்ற குழுவினர் திறம்பட செய்யப்பட்டிருந்த உப உணவுப் பயிர் செய்கைளைக் கண்டு பூரிப்படைந்தது மட்டுமல்லாமல், ஆச்சரியமும் அடைந்தனர். மேலும் விவசாயிகளுடைய அபிப்பராயங்களைக் கேட்டறிந்ததுமல்லாமல், தங்களது அறிவுரைகளையும் வழங்கினர்.
இக்குழுவில், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் (விரி) எஸ். உதயச்சந்திரன் , மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் க. மகேந்திரன், மன்னார் மாவட்ட செயலக பிரதான கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன், விவசாய திணைக்கள பூந்கனிவியல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி இருதயநாதன் அர்ஜின் குரூஸ் ஆகியோரும் அடங்குவர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)