
posted 10th October 2022
யாழ்ப்பாணம்..வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை பங்காளிக் கட்சியிடமிருந்து பெறாத விவகாரத்தை சுட்டிக்காட்டி முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ. பரஞ்சோதி தமிழரசுக் கட்சியிலிருந்து விலகினார்.
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளி கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போதுள்ள கோப்பாய் (வலி. கிழக்கு) பிரதேச சபை தவிசாளரை மாற்றுமாறு விடுத்த கோரிக்கையை செயல்படுத்த தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராசா தவறிவிட்டார். இதன் அடிப்படையிலும் கட்சியை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத இயலாமை நிலையில் தலைவர் காணப்படுகின்றார் என்றதன் அடிப்படையிலும் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக அவர்அறிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)