சீரற்ற கால நிலை தொடரும்!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடருமென அறிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடற்றொகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக உருவாகும் சந்தரப்பம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் சீரற்ற நிலை மேலும் நீடிப்பதுடன், கடும் மழை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு நிலமைகள் காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுகமக்கள், மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரியுள்ள வளிமண்டவியல் திணைக்களம் இது தொடர்பில் செம்மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

மேலும் கடற்பரப்புக்களில் கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையும் கடல் கொந்தளிப்பும் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பிரதேசங்களில் நீர் நிலைகள் நிரம்பி வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளப்பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை சீரற்ற கால நிலை நீடிக்கலாமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீரற்ற கால நிலை தொடரும்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY