
posted 9th October 2022
மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயம் நடத்திய சிறுவர்தின விழா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் திருமதி வசந்தி ஜெயந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லண்டனில் இருந்து வருகை தந்த செபமாலை வேதிங்டன் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு கல்வி வலய விஷேட கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் எஸ். சிவகுமார் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களினால் கவிதைகள், பேச்சு, அபிநயப் பாடல்கள், நடனம் போன்ற நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
அத்தோடு சிறுவர்தினம் தொடர்பாக மாணவர் மத்தியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, சித்திரம் வரைதல் ஆகியவற்றில் வெற்றியீட்டியோருக்குப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY