சிறுவர் தின விழா

“பின் தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு நாம் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும்”

இவ்வாறு ஒலுவில், அஷ்ரப் நகர் அல்-அக்ஷா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தினவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் கூறினார்.
வித்தியாலய அதிபர் ஏ.ஐ.முக்தார் தலைமையில், வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பும் இடம் பெற்றன.

தவிசாளர் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“இன்றைய சிறார்களை எதிர்கால நற்பிரஜைகளாக உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும் பெற்றோரின் பொறுப்பும் முக்கியமாகவேயுள்ளது.

இந்த வகையில் பின்தங்கிய, வளங்கள் குறைந்த பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் நாம் விசேட கவனம் கொள்ள வேண்டும்.

குறிப்பாக வறுமை, ஏழ்மை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. மாணவர்களின் ஆற்றல்கள், திறமைகள் வளர்த்தெடுக்கப்படும் வகையில் ஊக்குவிப்புக்கள் அமைய வேண்டும்.

இந்த வகையில் சர்வதேச சிறுவர் தினம் போன்ற, மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்வுகள் பாடசாலைகளில் சிறப்பு நடைபெற வேண்டும்” என்றார்.

சிறுவர் தின விழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY