சிறுதீவு சூலாயுதருக்கு இந்து இளைஞர்களால் வழிபாடு.

யாழ்ப்பாணம் பண்ணை சிறுத்தீவில் (பழைய பெயர் சிவன் தீவு) வீற்றிருந்து அருள் ஆட்சி புரியும் சூலாயுதர் சிவன் கோவிலில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை இந்து இளைஞர்களால் 3 வருடங்களின் பின் பூசைகள் நடாத்தப்பட்டன.

குறித்த சிவன் ஆலய மூல மூர்த்தியான சூலாயுதனார் கடந்த 2017 ம் ஆண்டு விஷமிகளால் காணாமல் ஆக்கப்பட்டு மீண்டும் அதே ஆண்டில் இந்து மீனவர்களால் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவ பூமியாம் இலங்கையில் அதுவும் குறிப்பாக சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் சைவர்களுக்கு எதிரான வன்ம செயற்பாடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

2017 ல் குறித்த ஆலயம் விஷமிகளால் இல்லாது ஒழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்து மீனவர்கள் பாதுகாத்து வழிபாடு செய்வது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுதீவு சூலாயுதருக்கு இந்து இளைஞர்களால் வழிபாடு.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)