
posted 20th October 2022

சமுர்த்தி சமுக பாதுகாப்பு நிதியத்திலிருந்து சமுர்த்தி “சிப்தொர”புலமைப்பரிசில் பெறும் மாணவர்களில் (க.பொ.த) உயர் தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும், அதனுடன் இனைந்ததாக (க.பொ.த) உயர் தரத்தற்கு தெரிவான மாணவர்களுக்கு “சிப்தொர”புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் SLM. ஹனிபா தலைமையில் இன்று (20) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் MSM. சப்றாஸ் கலந்து கொண்டதோடு இந்நிகழ்வில் அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் UM. அஸ்லம், கணக்காளர் I.M பாரிஸ் ,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் U.L.M. சலீம், வங்கிச் சங்க முகாமையாளர் SM அம்சார், சமுர்த்தி திட்ட முகாமையாளர் A.L.A ஹமீட், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்,சமுகசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய சமுர்த்தி பிரிவு உத்தியோகத்தர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வினை சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)